பிராமின் - non பிராமின் சாப்பாடு
தான் எழுதிய உயிலில் பிள்ளையார் கோயிலுக்கு சொத்து எழுதிவைத்துவிட்டாராம் பெரியாரின் அப்பா. அதோடு பார்ப்பனர்களுக்கும் சாப்பாடு போடவேண்டும் என்றும் எழதி வைத்துவிட்டார்.
தந்தை பெரியார் வந்தபொழுது பார்ப்பனர்களுக்கு சாப்பாடு போடவில்லையாம். எல்லோரும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்களாம். நீதிபதி பெரியாரைப் பார்த்துக் கேட்டாராம். உங்களுடைய அப்பா உயிலில்,பார்ப்பனர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் ஏன் அவர்களுக்கு சாப்பாடு போடவில்லை என்று கேட்டாராம்.
அப்பொழுது தந்தை பெரியார் சொன்னராம். நான் சாப்பாடு போடுகிறேன். ஆனால் அவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள் என்று சொன்னாராம்.
உடனே பிராமணர்களைப் பார்த்துக் கேட்டாராம் நீதிபதி, அவர்தான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாராமே , நீங்கள் ஏன் சாப்பிட மறுக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்குப் பார்ப்பனர்கள் இல்லை, இல்லை அவர் நான் - பிராமினுக்குரிய சாப்பாட்டை செய்து போடுகிறார். அதை எப்படி நாங்கள் சாப்பிடுவது என்று கேட்டார்கள்.
நீதிபதி திரும்ப பெரியாரிடம் கேட்டாராம். உடனே பெரியார் சொன்னாராம் எங்கள் தந்தையார் உயிலில் சாப்பாடு போடுவதைத்தான் எழுதி வைத்தார். அதிலே பிராமின் சாப்பாடு, நான்-பிராமின் சாப்பாடு என்று எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னாராம், நீதிபதியிடம் . நீதிபதி அப்பொழுதே பார்ப்பனர்கள் போட்ட வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டாராம்.தகவல் - மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்
Download As PDF

4 கருத்துரைகள்:
பெரியாரை பார்ப்பனர்கள் விஷயத்தில் அவர் தந்தை செருப்பாலடித்ததாக படித்துள்ளேன். ஆகவே பெரியார் தந்தையின் உணர்ச்சிகளை மதிக்காமல் செயலாற்றியதை புரிந்து கொள்கிறேன். அதற்காக அவர் செய்த குறும்பையும் ரசிக்கிறேன்.
அதே சமயம் போயும் போயும் அவரிடம் போய் சாப்பாட்டை எதிர்பார்த்த சம்பந்தப்பட்ட பார்ப்பனர்களின் சுயமரியாதையற்ற தன்மையையும் கண்டிக்கிறேன். நன்றாக வேண்டும் அவர்களுக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
நன்றி தலைவா!கண்டிப்பாக நானும் தலைவனுடன் சேருகிறேன்
அய்யா டோண்டு ராகவன்!அவர்களே மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு கருத்துரைத்ததற்கு நன்றி
கருத்துரையிடுக