எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன. -பெர்னாட்ஷா-

கலைஞரின் கெட்டிக்காரத்தனம்



"மிசா" வில் எதிர்கட்சியினர் அனைவரும் ஜனவரி 31 ந்தேதி கைது செய்யப்பட்டார்கள்.குறிப்பாக திக திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.அப்படிப்பட்ட சூழ்நிலையிலே யார் யார் மிசாவிலே கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலே இருக்கின்றார்கள் என்பது தெரியாது.ஆனால் மக்களுக்கு,சிறையில் இருப்பவர்கள் யார் யார் என்பதை தெரியப்படுத்தியாக வேண்டும்.நாளேடுகளிலும் வெளியிடமுடியாது.ஏனென்றால் விடுதலை,முரசொலி இந்த இரு ஏடுகளும் தயார் ஆனவுடன் நெருக்கடி கால அதிகாரிகளிடம் தினசரி கொண்டு போய் காட்ட வேண்டும். அவர்கள் அடிக்கின்ற செய்தி பத்திரிகையில் வரக்கூடாது. இப்படித் தணிக்கை செய்தார்கள்.பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா அவர்களுடைய நினைவுநாள்.அன்று "அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்கள்!" என்ற ஒரு பட்டியலை முரசொலியில் கலைஞர் வெளியிட்டார்.அதில்தான் வீரமணி, ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், சிட்டிபாபு,... என்று அத்தனை பேருடைய பட்டியலையும் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்.அதைப்பார்த்துதான் மக்கள் அனைவரும் அறிந்துகொண்டனர்.
-திக தலைவர் ஆசிரியர் வீரமணி-
Download As PDF

4 கருத்துரைகள்:

۞உழவன்۞ சொன்னது…

உங்கள் வரவுக்கும் நல்ல தரவுக்கும் நன்றிகள் மீண்டும் வருக *உழவன் *

எசாலத்தான் சொன்னது…

நண்பர் உழவன் அவர்களே!தாங்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்."உங்கள் வரவுக்கும் நல்ல தரவுக்கும் நன்றிகள் மீண்டும் வருக"

thalaivan சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

எசாலத்தான் சொன்னது…

நன்றி தலைவா!கண்டிப்பாக நானும் தலைவனுடன் சேருகிறேன்

கருத்துரையிடுக