பெரியாரின் நாக்கில் புற்றுநோய்
தந்தை பெரியாருக்கு அப்போது 40 ஆவது வயது. நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டது. தந்தை பெரியார் மருத்துவராகிய டாக்டர் பி.எம்.சுந்தரவதனத்திடம் காட்டினார். அட சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும், என்று கூறி சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். அந்த நோயும் குணப்படுத்தப்பட்டது. இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுவதுதான் முக்கியம்.
நான் கவலைப்பட்டது நாக்கில் புற்று நோய் வந்ததால் சாகப் போகிறோம் என்றல்ல! இந்தப் பாவி கடவுளை, மதத்தைத் திட்டினான், அதனால்தான் நாக்கில் புற்று வந்து செத்தான் என்று என் கருத்துக்கு எதிர்ப்பானவர்கள் அவதூறு பரப்பிவிடுவார்களே. . . அதனால் நமக்குப் பின்னும்இந்த வேலைக்கு எவனும்துணிந்து வரமாட்டானே - என்ற கவலைதான் எனக்கு என்று பெரியார் கூறுகிறார்.
தனக்கு நோய் வந்தது என்பதை விட, அதனால் கொள்கைக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்கிற நோக்கும் சிந்தனையும்தான் அவருக்கு! பொதுவாக நோய் வயப்படும் மனிதன் பலகீனமடைவான். ஆனால் அந்த நேரத்திலும் கொள்கைக்கு முன்னிடம் கொடுத்துச் சிந்தித்த மன உறுதிக்குப் பெயர்தான் பெரியார். அந்த நோயை வென்று காட்டியதன் வாயிலாகவும் தந்தை பெரியார் தமக்கு எதிர்ப்பான சக்திகளை முறியடித்து விட்டார்!
Download As PDF

2 கருத்துரைகள்:
அவர் தான் பெரியார்..!
அதனால் தான் பெரியார்!
நல்ல பகிர்வு நண்பரே...
//அவர் தான் பெரியார்..!
அதனால் தான் பெரியார்!// சரியாகச் சொன்னீர்கள் முனைவர் அவர்களே!.நன்றி
கருத்துரையிடுக