எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன. -பெர்னாட்ஷா-

ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால்

ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு.
அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு. - எமர்சன்.

Download As PDF

பெரியார் கடவுள் இல்லையெனக் கூற காரணம்

கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லுகின்ற
காரணத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார்
படபடப்பே இல்லாமல் மிகத் தெளிவாய்
பதிலளித்தார் பெரியாரும் மிகச் சிறப்பாய்
படம் இல்லை சிலை இல்லை படைத்தவனாம்
பார் படைத்த இறைவனுக்கு உருவம் இல்லை
திடமாகச் சொல்லுகின்ற இசுலாம் மார்க்கம்
செப்புவதை மறுக்கின்றார் இந்து மக்கள்


வடம் போட்டுத் தேரிழுத்து கோயில் கட்டி
வணங்குகின்ற கிறிஸ்துவையும் இந்துவையும்
புடம் போட்ட இசுலாத்தார் மறுத்து நின்றார்
புரிந்து கொண்டேன் அன்றே நான் புரிந்து கொண்டேன்
இவர் கடவுள் இல்லையென்று அவர்கள் சொன்னார்
அவர் கடவுள் இல்லையென்று இவர்கள் சொன்னார்
அவரவர்தம் கருத்தினையே கூட்டிப் பார்த்தேன்
அதையேதான் நான் சொன்னேன் கடவுள் இல்லை

நெல்லை கண்ணன்


Download As PDF

பெரியாரை எதிர்த்து இயக்கம் கண்ட முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்! இவர் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்களில் ஒருவர். ஒரு கட்டத்தில் பெரியாரோடு இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரியாரை விட்டு விலகி வெளியேறினார்!

பெரியாரைக் கண்டித்து, காட்டமாக, காரசாரமாக கண்டித்து அறிக்கைகள் விட்டார். அத்தோடு நின்றாரா?

பெரியாரின் இயக்கம்_போகாத ஊருக்கு இல்லாத வழியை இருட்டில் காட்டும் இயக்கம் என்று கூறி, இதோ ஒரு புதிய தமிழ் அமைப்பு; தமிழுக்காக - தமிழருக்காக - தமிழரால் நடத்தப்படும் தமிழியக்கம் என்ற பிரகடனத்தோடு தமிழர் கழகம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே - என்ற கோஷத்துடன் முத்தமிழ்க் காவலர் அவர்கள் தொடங்கிய தமிழர் கழகத்தின் பிரச்சார பீரங்கியாக தமிழர் நாடு என்ற பெயரில் ஓர் ஏட்டினையும் தொடங்கினார். பெரியாரையும், அவரது கொள்கைகளையும் இதழ் தவறாது கனல் பறக்க விமர்சித்தார்.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக் காலத்திற்குப் பிறகு - தமிழர்நாடு ஏட்டின் முதல் பக்கத்தில்,

கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன்

என்ற தலைப்பில் - பெரியாரின் இயக்கத்தை எதிர்த்து - புதுக்கட்சி - புது ஏடு நடத்துவதில் தமக்குத் தோல்வியே கிட்டியது என்பதை நேர்மையோடும், நாணயத்தோடும், பெருந்தன்மையோடும் ஒப்புக் கொண்டு எழுதியதோடு, இந்த இதழோடு தமிழர்நாடு ஏடு நிறுத்தப்படுகிறது; தமிழர் கழகத்தின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த உதாரணத்தின் மூலம் - பெரியாரை எதிர்த்து யாரும் இயக்கம் கட்ட முடியாது என்பதை அனுபவ ரீதியாக எடுத்துக் காட்டினார் முத்தமிழ்க் காவலர்.

சின்னகுத்தூசி முரசொலி 26.9.2009
Download As PDF

பாரதிதாசன் பாடல்கள் mp3 வடிவில் கேட்டு மகிழுங்கள்

Powered by eSnips.com

Download As PDF

சுயமரியாதை திருமணம் செய்யும் முறை

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.

2. இசை: திராவிட நாட்டுப் பண்.

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன் என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, நாங்கள் ஆதரிக்கிறோம் என்று வழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்: மணப்பெண், இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன் என்று சொல்லல். மணமகனும் அவ்வாறு சொல்லல். அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். வாழ்க என முழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை: அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல். இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம். இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில் ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும் பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது. இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம்.

ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்? -- பாரதிதாசன்
Download As PDF

பெரியாரின் வால்பேப்பர்

நீண்ட நாட்களாக பெரியாரின் படம் கொண்ட வால்பேப்பர்களை இணையத்தில் தேடி தேடி அலுத்துவிட்டேன்.திராவிடர் கழகத்தின் இணையத்தில்கூட பழைய காலண்டர் வடிவத்தில் உள்ள படங்களைமட்டுமே காண முடிகிறது.எனவே என்னால் முடிந்த அளவுக்கு, படங்களை மேம்படுத்தும் என் அறிவிற்கு ஏற்ப அய்யாவின் படங்களை, அவரின் பொன்மொழிகளோடு
வால்பேப்பர்களாக தயாரித்து இதில் வெளியிடுகிறேன்.படம் வேண்டுவோர் படத்தின்மீது க்ளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.மிகுந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட தமிழர்கள் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி பெரியாரின் வால்பேப்பர் இணையத்தில் ஏராளமாக கிடைக்க வழிவகை செய்யுமாறு பனிவுடன் கோருகிறேன்.


Download As PDF

பொன்மொழிகள்

புகழ்ச்சி,பாராட்டைவிட ஒரு மனிதனுக்கு நல்ல தண்டனை வேறு இருக்க முடியாது - பெரியார்
Download As PDF

மண்.. - காசி ஆனந்தன் கவிதை

என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?
Download As PDF

குடுகுடுப்பைக்காரன் - காசி ஆனந்தன் கவிதை

குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்.
Download As PDF

சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்

சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம் - தந்தை பெரியார்
Download As PDF

குடும்பம் நன்றாக வாழ வேண்டுமானால்

குடும்பம் நன்றாக வாழ வேண்டுமானால் மனிதர்கள் இயற்கையாக அழுதால் மட்டும் போதாது.செயற்கையாகவாவது சிரிக்கவும் வேண்டும் - கண்ணதாசன்
Download As PDF

திரு.வி.கவுக்கு இவர் விபூதி கொடுத்த பெரியார்

திரு.வி.க அவர்கள் ஈரோட்டுக்குப் போகிறார். பெரியார் அவர்களும் உடன் இருக்கிறார். திரு.வி.க காலையில் எழுந்து காவேரிக் கரைக்கு குளிக்கப் போய்விட்டார். பெரியார் ஆற்றங்கரைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம். திரு.வி.க குளித்துவிட்டு வந்தாராம்.

பெரியார் தன்னுடைய மடியிலிருந்து விபூதி எடுத்துக்கொடுத்தாராம். என்னங்க, நீங்கள் சாமி இல்லை என்று சொல்லுகிற ஆளாயிற்றே, நீங்கள் போய் விபூதி கொடுக்கிறீர்களே! என்று கேட்டார் திரு.வி.க. என் வீட்டிற்கு நீங்கள் விருந்தினராக வந்திருக்கின்றீர்கள். அவர்களை கவுரவிப்பது என்னுடைய கடமையல்லவா என்று சொன்னார், பெரியார்.


மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்
Download As PDF

பத்து ரூபாய்க்கு முழுப்பெயரும் அய்ந்து ரூபாய்க்கு இனிஷியல் கையெழுத்தாக போட்ட தலைவர்

நானும் என்னுடைய நண்பர் ராமலிங்கமும் பெரியார் திடலுக்குப் போனோம். அய்யா அவர்களிடம் கையெழுத்து வாங்கச் சென்றோம்

அய்யா அவர்கள் பூதக் கண்ணாடியை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். அய்யா அவர்களிடம் ஒரு கையெழுத்து கேட்டோம். கல்லூரியிலிருந்து வந்திருக்கிறோம் நாங்கள், அய்யா கையெழுத்து வேண்டும் என்று கேட்டேன். பக்கத்தில் இருந்த உதவியாளர் சொன்னார். நீங்கள் காசு கொடுத்தவுடன் கையெழுத்து போடுவார் என்று சொன்னார். அப்பொழுது நமது ஆசிரியர் அவர்கள் அங்கு இல்லை. என் பக்கத்திலே இருந்த பையன் உடனே பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக்கொடுத்தான். அய்யா அவர்கள் அவனுக்கு ஈ.வெ.ராமசாமி என்று கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.

அடுத்தது நான். நம்ம பாக்கெட்டிலே ஏது காசு? தடவித், தடவிப் பார்த்தால் அய்ந்து ரூபாய்தான் இருந்தது. அய்யா என்னிடம் அய்ந்து ரூபாய்தான் இருக்கிறது என்று சொன்னேன். அதையும் பெரியார் வாங்கிக்கொண்டார்.

எனக்கு வெறும் ஈ.வெ.ரா என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். நான் கேட்டேன் அவனுக்கு ஈ.வெ.ராமசாமி என்று போட்டுக் கொடுத்தீர்கள். எனக்கு ஈ.வெ.ரா என்று மட்டும்தானே போட்டுக்கொடுத்தீர்கள். என்று கேட்டேன். அவன் 10 ரூபாய் கொடுத்தான். முழுப்பெயரைப் போட்டேன். அய்ந்து ரூபாய்க்கு வெறும் ஈ.வெ.ரா. தான் என்று சொன்னார்.

-மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்
Download As PDF

மார்க்சும்,எங்கெல்சும்,மாவோவும்கூட இங்கே பூநூலோடு புழக்கத்தில் இருக்கிறார்கள்

மார்க்சும்,எங்கெல்சும்,மாவோவும்கூட இங்கே பூநூலோடு புழக்கத்தில் இருக்கிறார்கள் - மத்திய அமைச்சர் ஆ.ராசா
Download As PDF

பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்டான்

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும், எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்டான் - டாக்டர் டி.எம்.நாயர்
Download As PDF

ஜின்னா ஆரியரா? திராவிடரா?

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று ஒரு தோழர் கேள்வி கேட்டிருக்கின்றார். திரு. ஜின்னா திராவிடர்; ஸ்ரீமான் ஜின்னா ஆரியர்; ஜனாப் ஜின்னா இஸ்லாமியர் - பேரறிஞர் அண்ணா
Download As PDF