எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன. -பெர்னாட்ஷா-

பெரியாரின் வால்பேப்பர்

நீண்ட நாட்களாக பெரியாரின் படம் கொண்ட வால்பேப்பர்களை இணையத்தில் தேடி தேடி அலுத்துவிட்டேன்.திராவிடர் கழகத்தின் இணையத்தில்கூட பழைய காலண்டர் வடிவத்தில் உள்ள படங்களைமட்டுமே காண முடிகிறது.எனவே என்னால் முடிந்த அளவுக்கு, படங்களை மேம்படுத்தும் என் அறிவிற்கு ஏற்ப அய்யாவின் படங்களை, அவரின் பொன்மொழிகளோடு
வால்பேப்பர்களாக தயாரித்து இதில் வெளியிடுகிறேன்.படம் வேண்டுவோர் படத்தின்மீது க்ளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.மிகுந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட தமிழர்கள் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி பெரியாரின் வால்பேப்பர் இணையத்தில் ஏராளமாக கிடைக்க வழிவகை செய்யுமாறு பனிவுடன் கோருகிறேன்.


Download As PDF

2 கருத்துரைகள்:

தன்மானம் சொன்னது…

பெரியாரின் பொன்மொழிகள் அருமை!





வைகறை

எசாலத்தான் சொன்னது…

அய்யா தன்மானம்!தன்மானத்தந்தையின் பொன்மொழிகளைப்பற்றிய தங்களின் கருத்துக்கு நன்றி.

கருத்துரையிடுக